website loader
×

மதுரையின் மணிமகுடத்தில் பளிச்சிடும் நம் பெருமைமிகு அரசபட்டி முத்து

திருமங்கலம் : தனது அனுபங்களை பாடலாக்கியவர் கண்ணதாசன் என்றால், அனுபவங்களை நகைச்சுவையாக்கியவர் நம் மதுரை முத்து. மதுரையின் மணிமகுடத்தில் பளிச்சிடும் நம் திருமங்கலத்து முத்து

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா தி. அரசபட்டி இராமசாமி - முத்து இருளாயி ஆகியோருக்கு மகனாய் 1979ம் ஆண்டு, செப். மாதம் 19ம் நாள் பிறந்தார். தனது பாத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிப் படிப்பை வீரப்பெருமாள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளை திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பட்ட மேற்படிப்புகளை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியிலும் முடித்தார். தனது நகைச்சுவை பேச்சாற்றலால் மக்களின் மனங்களைக் கவர்ந்தார். சன்டிவி அசத்தப்போவது யாரு? மற்றும் விஜய்டிவி கலக்கபோவது யாரு? போன்ற நகைச்சுவை நிகழ்சிகளில் பங்கு பெற்று வெற்றியும் அடைந்தார். மேலும் ஏறத்தாழ ஆயிரத்திற்கு மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிகழ்ச்சிகள் என பெரும் பிரபலம் அடைந்தார். மேலும் பட்டிமன்ற நிகழ்சிகளுக்கும் நடுவராக இருந்துள்ளார். சின்னக் கலைவாணர் விருது, நகைச்சுவை சக்கரவர்த்தி விருது, காமெடி கிங் விருது இன்னும் பல விருதுகளை தனது நகைச்சுவைப் பேச்சாற்றலால் குவித்துள்ளார்.

Thirumangalam taluk T. Arasapatti born Madurai muthu's biograhy

நம் திருமங்கலத்தைப் பற்றின இது போன்ற தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் தயங்காமல் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தங்கள் பெயருடன் நம் Tirumangalam.com இணையதளத்தில் பதிவிடப்படும். Send ur mail to admin@tirumangalam.com-->

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top