website loader
×

திருமங்கலம் பகுதியில் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை - எம்.எல்.ஏ

திருமங்கலம் : திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர், காட்டுநாயக்கர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது திருமங்கலம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ திரு, முத்துராமலிங்கம் அவர்கள், தமிழகத்தில் சாலையோரம் உள்ளோருக்கு தமிழக அரசால் பசுமை வீடுகள் கட்டித்தரும் இவ்வேளையில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி. கல்லுபட்டி, பேரையூர் பகுதியில் நரிக்குறவ மக்கள் பேருந்து நிலையத்தில் தான் வெகு காலமாய் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுகென்று சொந்த வீட்டுமனைப் பட்டாவும், திருப்பரங்குன்றம் இரயில் நிலைய பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்ற மலைக்குப் பின்னால் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் காட்டுநாயக்கர்களுக்கு புதிய வீடுகளுக்கான மனைப் பட்டாவும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் பேருந்து நிலையம் மற்றும் பிற பகுதிகளில் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் காட்டுநாயக்கர்களுக்கு உரிய ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இடத்தை தேர்வு செய்து வழங்கப்படும் என்று அதிலளிதார்.
தகவல் : மாலை முரசு

Thirumangalam MLA Muthuramalingam raised question to alot land for Nari Kuravars.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top