website loader
×

பெரீஸ் பிஸ்கட்டை உலகறியச் செய்த நம்ம திருமங்கலம் இரயில் நிலையம்

திருமங்கலம் : தமிழன் தயாரித்த முதல் பிஸ்கட்டை உலகறியச் செய்த நம்ம திருமங்கலம் இரயில் நிலையத்தின் சிறப்பு

பிஸ்கட் என்பது ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்பு. வெள்ளைக்கார துரைமார்கள் மட்டுமே அதை சாப்பிட்டு வந்தனர். வெளிநாட்டுக்குச் சென்றுவந்த ஒரு சில பணக்காரர்களும் பிஸ்கட்டை சாப்பிட்டனர். இதனால், சாதாரண மக்களுக்கும் பிஸ்கட் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை பிறந்தது. ஆனால், அப்போது பிஸ்கட் தயாரிக்கிற நிறுவனம் எதுவும் உள்நாட்டில் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்த தயாரிப்புகள் சாதாரண மக்களைச் சென்றடையவில்லை. இந்நிலைமையில் சாதாரண மக்களும் சாப்பிடும் வகையில் குறைந்த விலையில் தரமான பிஸ்கட்டை தயாரித்து 1917ல் இருந்து விற்பனை செய்யதது பெரிஸ் பிஸ்கட் நிறுவனம். அந்நிறுவனத்திற்கு தேவையான மைதா மும்பையிலிருந்தும், தேவையான எசென்ஸ்கள் வெளிநாடுகளிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாகவும் ரயில்கள் மூலம் திருமங்கலம் வந்தடையும். அதன் பின்னர் மாட்டு வண்டிகள் மூலம் உசிலம்பட்டியிலுள்ள நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. அதேபோல், தயாரித்த பிஸ்கட்டுகளை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யவும் திருமங்கலம் ரயில் நிலையம் மூலமாகத் நடந்தது. தமிழன் தயாரித்த முதல் பிஸ்கட்டுகளை உலகறியச் செய்த பெருமை நம் திருமங்கலம் இரயில் நிலையத்திற்கு உண்டு!!

நன்றி : விகடன்

Usilampatti Peris Biscuit was imported the goods exported the products through Thirumangalam Railway Station.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top