website loader
×

"நமக்கு நாமே" - திருமங்கலத்தில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின்

திருமங்கலம் : தி.மு.க.வின் "நமக்கு நாமே" விடியல் மீட்பு பயணத்தின் 6வது நாளான இன்று (செப்.25) மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மக்களுடன் உரையாடினார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்திக்கும் “நமக்கு நாமே” விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கடந்த 20ம் தேதி தொடங்கி, 6வது நாளான இன்று மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று இரவு காரியாபட்டியில் தங்கிய மு.க.ஸ்டாலின் இன்று காலை 7.30 மணிக்கு அவனியாபுரம், 8.05 மணி- திருப்பரங்குன்றம், பின்னர் காலை 9 மணியளவில் திருமங்கலம் - மதுரை சாலை மற்றும் உசிலம்பட்டி சாலை வழியாக திருமங்கலம் ஆட்டு சந்தையில் மக்களோடு உரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் நக்லகோட்டை. உசிலம்பட்டி. செக்கானூரணி. சோழவந்தான். அலங்காநல்லூர். ஊமச்சிகுளம். வண்டியூர். ஒத்தக்கடை. மேலூர் பஸ்ஸடாண்ட். சென்று பின்பு திருமோகூரில் ஒன்றிய செயலாளர் இல்லத்தில் தங்குகிறார்.

மாவட்ட திமுக செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் கூறும்போது, “மு.க.ஸ்டாலின் விவசாயிகள், நெசவாளர்கள், மகளிர், மாணவ, மாணவிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வியாபாரிகள், சிறுவணிகர்கள், ஆடு மாடு வளர்ப்போர் என பல்வேறு தரப்பு மக்களுடன் ஐக்கியமாகி கலந்துரையாடுகிறார்.” என்றார்.
படம்: திரு. மு.சி.சோ.சி.க.. வினோத்
Mr. MK Stalin traveled through Thirumangalam for the "Namakku Naame" Scheme today morning.





தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top